ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் பங்கேற்பு - கூட்டணிக்கட்சிகள் புறக்கணிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பை ஏற்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு.

ஆளுநர் தேநீர் விருந்து: முதலமைச்சர் பங்கேற்பு - கூட்டணிக்கட்சிகள் புறக்கணிப்பு

நாட்டின் 74வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன் அடிப்படையில், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டுருந்தது.இதையடுத்து ஆளுநரின் அழைப்பை ஏற்று தமிழ் நாடு முதலமைச்சர்  முக.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரிய சாமி கலந்து கொண்டனர்.

OPS Attended With Supporters.. Absent EPS.. Governor's Tea Party.. Full  Details | PiPa News

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமசந்திரன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி செந்தில், அரக்கோணம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tea party given by the Governor: Government of Tamil Nadu, parties boycott  – Chief Minister, Ministers, Government officials did not go | Government  of Tamil Nadu parties boycott Governor Tea party -

திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்., பாஜக கட்சி தலைவர்  அண்ணாமலை ,துணை தலைவர் வி பி துரைசாமி ,நாராயண திருப்பதி மற்றும் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.

Republic Day 2023: DMK To Attend Governor's Tea Party, Allies To Boycott

அதேபோன்று அதிமுக ஓபிஎஸ்  அணியிலிருந்து ஆளுநர் தேநீர் விருந்து யாரும் பங்கேற்கவில்லை.சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், திரைபிரபலங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குடியரசு தின அலங்கார ஊர்திக்கான முதல் பரிசை காவல்துறை ஊர்தி சார்பில் தமிழக டிஜிபிக்கு ஆளுநர்  வழங்கினார்.இரண்டாவது பரிசை தீயணைப்புத்துறை அலங்கார ஊர்தி பெற்று கொண்டது. செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு மூன்றாம் பரிசு வழங்கபட்டது.

மேலும் படிக்க| திமுக கூட்டணிக்கு கமல் ஆதரவு - வாங்க வாங்க என வரவேற்ற கி.வீரமணி

சமூக சேவை , சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டது. வனிதா மோகன் என்பவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ் 10லட்சம் ரூபாய் பரிசை ஆளுநர் வழங்கினார்.