காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை...!

காந்தியின் உருவப்படத்திற்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை...!

Published on

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியடிகளின் 76வது நினைவுநாள் :

தேச விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இணையத்தில் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மலர் தூவி மரியாதை :

இந்நிலையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்திடியகளின் உருவப்படத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்தியும் உலக அமைதியும் :

இதையடுத்து காந்தியும் உலக அமைதியும் என்ற புகைப்பட கண்காட்சியை இருவரும் திறந்து வைத்து, ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டவாறே அனைத்தையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com