"பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே அரசின் நோக்கம்"

"பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே அரசின் நோக்கம்"
Published on
Updated on
2 min read

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையத்தில் திருச்செங்கோடு பள்ளிபாளையம் ஒன்றியங்களில் உள்ள 669 ஊரககுடியிருப்புகள் மற்றும் படைவீடு பேரூராட்சி ஆலம்பாளையம் பேரூராட்சி சேலம்மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரூபாய் 399.46 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் தொடக்க விழா என்பது நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில் பத்தாண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் செய்யப்படாத சாதனைகள் அனைத்தையும் நமது முதல்வர் செய்துள்ளார் என்றும்,  திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட  500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீதம் தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகளில் சொல்லாத வாக்குறுதிகளையும் புதுபுதிய திட்டங்களையும் செயல்படுத்துவார் எனவும் பேசினார். 

விழா கல்வெட்டை திறந்து வைத்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிக்காக 18 மாதத்தில் 1100 கோடி திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்,  கடந்த 11 ஆண்டு கால அதிமுக ஆட்சியில்  360 கோடி தான் கொடுத்துள்ளனர் என்றும், அதுவும் ஆரம்பித்து மட்டும்தான் வைத்தனர் அதற்கும் நாங்கள்தான் நிதிஒதுக்கஉள்ளோம் எனவும் விமர்சித்தார்.

தமிழக மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே தமிழக முதல்வர் ஸ்டாலினின் முக்கிய நோக்கமாகும் என்றும் கூறினார். தொடர்ந்து நகர்ப்புறங்கள் ஊராட்சி கிராம பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்துவருகிறோம் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் சாலைகள் இல்லாது  இருந்த நிலையில் தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைத்துதரப்பட்டது எனவும் தெரிவித்தார். 

மேலும், நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தனர் கொள்கையளவில் ஒத்துக்கொண்டுள்ளோம்; இன்னும் முதலமைச்சரின் அனுமதி பெறவில்லை", என்றும் கூறினார்.  அதோடு, மாநகராட்சிஆக்கவேண்டும் என்றால் 3 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும்; 30 கோடிவருவாய் இருக்க வேண்டும்; அப்படி இருந்தால்தான் அது மாநகராட்சி", என்றார். 

அதையடுத்து, தமிழகத்தில் நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்படும் எனவும், அதில் நாமக்கல்லும் உண்டு என்றும் கூறினார். தமிழகமுதலமைச்சரிடம் கலந்துபேசி நிதி நிலைக்கு ஏற்ப விரைவாக மாநகராட்சியாக அறிவிப்பதாகவும் கூறினார்.  இன்றைய ஆட்சியை மத்திய அரசின் கவர்னராக இருக்கக்கூடியவர், முதலமைச்சரை விமர்சிக்கக்கூடிய அளவிற்கு இந்த நாட்டில் இருக்கிறது; அதையும் தாண்டி நிதி நெருக்கடி எல்லாம் சமாளித்து இவ்வளவு திட்டத்தையும் நமது முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

இந்தநிகழ்ச்சியில்ஈரோடுபாராளுமன்றஉறுப்பினர்கணேசமூர்த்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயாபிசிங்,  குடிநீர் வழங்கல் துறை மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகதுறை முதன்மை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com