குவைத்தில் இருந்து சென்னை வந்த விமான இருக்கை அடியில் இருந்த தங்கத்தை எடுத்து சென்ற விமான நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 624 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்து தனியார் விமான நிறுவன ஊழியர் ஒருவர் செல்லும் போது சந்தேகத்தின் அடிப்படையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய பேண்ட் பின் பாக்கெட்டில் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 624 கிராம் தங்கம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிறுவன ஊழியரிடம் விசாரித்த போது குவைத்தில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியில் ஆந்திர வாலிபர் வைத்து விட்டு அந்த தங்கத்தை அதிகாரிகளிடம் சிக்காமல் வெளியே வந்து தன்னிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தங்கத்துடன் பிடிப்பட்ட விமான நிறுவன ஊழியரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ”நாள்தோறும் திட்டங்களை தீட்டுவதே எனது பணி...”முதலமைச்சர்!!