சிறுமிகளின் கோரிக்கையும்...அமைச்சர் உதயநிதியின் தீர்வும்...!

சிறுமிகளின் கோரிக்கையும்...அமைச்சர் உதயநிதியின் தீர்வும்...!

சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், பூங்கா வேண்டும் என சிறுமிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற தீர்வு மேற்கொண்டுள்ளார். 

கோரிக்கை வைத்த சிறுமிகள்:

சிவகங்கை, சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா என்ற இரண்டு சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதையும் படிக்க: வரலாறுகள் நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டது - பிரதமர் மோடி !

தீர்வு மேற்கொண்ட அமைச்சர்:

இந்த கோரிக்கையை தொடர்ந்து, சிறுமிகளுக்காகவே பூங்கா அமைத்து தர வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக  ரூ.14 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி நேற்றுமுன்தினமே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி:

இந்நிலையில் சிறுமிகளின் கோரிக்கையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் உதயநிதி, சிறுமிகள் என்னிடம் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கான தீர்வாக பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்றுமுன்தினமே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், சிறுமிகளின் விருப்பம் நிறைவேறுவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.