”முழு ஒத்துழைப்பு உண்டு, ஆனால் எந்த நோக்கத்தில் சோதனை நடக்குது என்று தெரியவில்லை” - செந்தில் பாலாஜி!

”முழு ஒத்துழைப்பு உண்டு, ஆனால் எந்த நோக்கத்தில் சோதனை நடக்குது என்று தெரியவில்லை” - செந்தில் பாலாஜி!
Published on
Updated on
1 min read

அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது என்று தெரியவில்லை எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த 8 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து தற்பொழுது, சட்ட விரோத பண பரிவர்த்தனை ஏதும் நடைபெற்று இருக்கின்றதா என்ற கோணத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள  அரசு இல்லத்திலும், கரூரில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், எந்த நோக்கத்தில் சோதனை நடைபெறுகிறது என்று தெரியவில்லை எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வருமான வரித்துறையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறையாக இருந்தாலும் சரி, எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com