சென்னை துணை மேயர் மகேஷ் குமார் மீது மோசடி வழக்கு!!

சென்னை துணை மேயர் மகேஷ் குமார் மீது மோசடி வழக்கு!!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) சென்னைக்கு மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார் மீது பெறப்பட்ட மோசடி புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ளார்.

தொழிலதிபர் எஸ் ஆர். மோகன் மறைந்த பின், அவர் நடத்தி வந்த குவாரியை, மேயர் உட்பட 6 பேர் அபகரித்துக்கொண்டதாக, மோகனின் மனைவி இசக்கியம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் புகாரும் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "தொழிலதிபர் எஸ். ஆர். மோகன் என்பவர் தாம்பரம் அருகே குவாரி நடத்தி வந்துள்ளார். பின்னர் உடல் நலக் குறைவால், 2021ம் ஆண்டில் உயிரிழந்துவிட்டார். இதனை பயன்படுத்தி, தொழிலதிபர் மோகனின் மறைவுக்கு பின்னர், குணசேகரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமாருடன் இணைந்து, மோகனின் குவாரி தொழிலை கையகப்படுத்தியுள்ளனர். ஆனால், இதற்காக தனக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி புகாரளித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புகாரின் அடிப்படையில், தற்போது 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com