ஆளுமைகளுக்கு சாரியட் விருதுகளை வழங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி....!! 

ஆளுமைகளுக்கு சாரியட் விருதுகளை வழங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி....!! 
Published on
Updated on
1 min read

ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் கிளப் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆளுமைகளுக்கு சாரியட் விருதுகளை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே. கண்ணன் வழங்கியுள்ளார்.

எழும்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ விடுதியில் ரோட்டாரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் சார்பில் சாரியட்  விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் முதன்மை விருந்தினராக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே. கண்ணன் கலந்து கொண்டார். 

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆளுமைகளை கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்கும் வகையில் தேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில்  கடந்த காலங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், நாகி ரெட்டி, நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் அங்கீகரித்துள்ளது.

ரோட்டரி மெட்ராஸ் சவுத்வெஸ்ட் கிளப் சார்பில் நடைபெற்ற விழாவில், சாரியட் விருதுகள் 2023க்கு 5 ஆளுமைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.  மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சுவிற்கு கவுரவ விருது வழங்கப்பட்டது.  பிரின்ஸ் ஜூவல்லரியின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான பிரின்ஸ்சன் ஜோஸ்க்கு தொழில்சார் சிறப்பு விருதும், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பட்டாபிராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நீச்சல் வீரர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசுக்கு இளைஞர் பிரிவில் விளையாட்டு விருதும் பெற்றனர்.  கர்நாடக இசைக்கலைஞரான காயத்ரி விபாவரி வியாகரனம் இளைஞர் பிரிவில் கலைக்கான  விருது பெற்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com