அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை...!

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை...!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

தமிழ்நாட்டில் 2023- 24  ஆம் நிதி ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 21 ம் தேதி பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் முதலமைச்சர் கீழ் வரும் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் உள்துறை குறித்த மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கைகள் குறித்து பதிலுரை அளித்த நிலையில், இன்றைய தினத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. 

இதையும் படிக்க : "அதானி - சரத்பவார் சந்தித்துக் கொண்டதில் தவறில்லை” - அஜித் பவார் பேட்டி!

இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அப்போது முதலமைச்சருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே. என்.நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ஏ.வ. வேலு, சேகர்பாபு, சாமிநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்