டாக்டர் ப. சுப்பராயனுக்கு சிலை; முதலமைச்சர் திறப்பு!

டாக்டர் ப. சுப்பராயனுக்கு சிலை; முதலமைச்சர் திறப்பு!
Published on
Updated on
1 min read

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் சிலை திறப்பு மற்றும் வ. உ. சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் உள்ள கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார். ப.சுப்பராயனின் வெங்கல சிலையானது 17 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்படையது ஆகும். 
சுப்பராயனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணை அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் 152ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது  சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இவ்விழாவில் ப.சுப்பராயனின் பேரன் மோகன் குமாரமங்கலம், செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ,தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி மற்றும் கட்சி பிரமுகர்கள் முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மோகன் குமாரமங்கலம் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com