
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், முதலீட்டை ஈர்ப்பதற்காகவா அல்லது முதலீடு செய்வதற்காகவா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் முதலமைச்சர் வெளி நாடுகளுக்கு இன்பச் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளர். மேலும், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை, தாங்கள் ஆட்சியில் கொண்டுவந்ததாக கூறும் திமுக அரசு, எந்த புதிய முதலீடுகளையும் கொண்டு வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது மேற்கொண்டுள்ள இந்த வெளிநாட்டு பயணம் முதலீட்டை ஈர்ப்பதற்காகவா அல்லது, முதலீடு செய்வதற்காகவா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.