“கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது...” சோனியா காந்தி!!

“கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது...” சோனியா காந்தி!!
Published on
Updated on
1 min read

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் திட்டமிட்டு சிதைத்துள்ளது. 

தலையங்கம்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில நாளிதழுக்கு எழுதிய தலையங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் குறி வைத்து விமர்சித்துள்ளார்.  'கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கைகள் அன்றைய மிக முக்கியமான பிரச்சினைகளை புறக்கணிக்கவோ அல்லது திசை திருப்பவோ முனைகின்றன என எழுதியுள்ளார்.

திட்டமிட்டு:

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் அரசாங்கம் திட்டமிட்டு சிதைத்துள்ளது எனவும் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த சம்பவங்களையும் சோனியா குறிப்பிட்டு இவை அனைத்தும் அமர்வுகளை சீர்குலைக்கும் அரசாங்கத்தின் உத்தியே எனக் கூறியுள்ளார்.  மேலும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பட்ஜெட், அதானி ஊழல், சமூகப் பிளவு போன்ற பிரச்னைகளை எழுப்புவதில் இருந்து எதிர்க்கட்சிகள் தடுக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

திசைதிருப்பும் செயல்:

அரசாங்கம் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது எனக் கூறி தகுதி நீக்கம் மற்றும் அவரது உரையின் சில பகுதிகளை நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  மேலும் வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள மத்திய அரசு தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற பல பிரச்சினைகளை இந்திய பிரதமர் எழுப்பினார் எனக் கூறிய சோனியா காந்தி பட்ஜெட்டில் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் செலவு திட்டமிடப்பட்டதாகவும் கவனத்தை திசை திருப்பியதன் மூலமாக மக்களின் பணத்தில் ரூ.45 லட்சம் கோடி பட்ஜெட் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது எனவும் சோனியா காந்தி எழுதியுள்ளார். 

தவறான பயன்பாடு:

மேலும், 'விசாரணை நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவது' குறித்தும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி. அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமான அரசியல் வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அதே நேரத்தில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திடீரென காணாமல் போனதாகவும் அதேவேளை ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பறித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைகோர்த்து:

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் கூட அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை எனவும் வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்றும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கைகோர்த்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் சோனியா எழுதியுள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com