உலகின் மிகப்பெரிய மிதக்கும் நூலகக் கப்பல்...

உலகின் மிகப்பெரிய மிதக்கும் நூலகக் கப்பல்...
Published on
Updated on
1 min read

எகிப்து போர்ட் சேடில் உள்ள உலகின் மிகப்பெரிய மிதக்கும் நூலகக் கப்பல் காண்போரைக் கவர்ந்து வருகிறது.

GBA ships என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் கட்டப்பட்ட லோகோஸ் ஹோப் என்ற இக்கப்பல் உலகம் முழுவதும் உள்ள கலாசாரங்களை அடிப்படையாக் கொண்ட புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது.

அறிவியல், கலை, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இக்கப்பலின் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 60 நாடுகளைச் சேர்ந்த 330 தன்னார்வலர்கள் இக்கப்பலில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகக் கப்பல் “மிதக்கும் நூலகம்” என அழைக்கப்படுகிறது. 350 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த கப்பல், பீருட்டில் இருந்து துவங்கி, ஜனவரி 4ம் தேதி சேட் துறைமுகத்தில் கரை சேர்ந்தது. 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் இந்த கப்பலில் இலவசமாக வருகை தரலாம் என கூறப்படுகிறது.

சுமார் 50,000 த்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல புத்தகங்கள் அடுக்கப்பட்டு இந்த மிதக்கும் நூலகம், சுற்றுலா பயணிகளின் கவனத்தைப் பெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com