நிர்ணயிக்கப்பட்ட தேயிலை விலை... தேயிலை விலை அதிகரிப்பா?!!

நிர்ணயிக்கப்பட்ட தேயிலை விலை... தேயிலை விலை அதிகரிப்பா?!!
Published on
Updated on
1 min read

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது.  குறிப்பாக 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியார் தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.

இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்து உள்ள பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கும்.  அதன்படி பிப்ரவரி, மார்ச் மாதம் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவிற்கு 19 ரூபாய் 23 பைசா என நிர்ணயம் செய்துள்ளது. 

இதை பிப்ரவரி மாதம் தேயிலை ஏல விற்பனை விலையின் அடிப்படையில் தேயிலை வாரியம் நிர்ணயித்து உள்ளது. இந்த விலையினை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் விவசாயிகளுக்கு வழங்குகிறதா என்று தேயிலை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com