4 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்...களைகட்டிய தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்...!

தூத்துக்குடி மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.


கடற் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கடந்த 31 ஆம் தேதி அறிவித்தது. இதனையடுத்து கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தான் அளித்த எச்சரிக்கையை திரும்பப் பெற்றதை தொடர்ந்து, இன்று காலை 189 விசைப்படகுகளில் மீனவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.  

இதையும் படிக்க : அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!

தொடர்ந்து நான்கு நாட்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் இன்று விசைப்படகுகள் கடலுக்குச் சென்றுள்ளதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் மீனவர்கள் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் களைகட்டிய உள்ளது.