தயாரிப்பாளர்களுடன் முறையான ஒத்துழைப்பு வழங்காத முன்னணி நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இதே நிலை தொடர்ந்தால் எந்த தயாரிப்பாளரும் அந்த நடிகர்களுடன் படம் எடுக்க போவதில்லை என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு...."
"தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி 15 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்...."
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்:-
' சிறு படங்களுக்கு மானியம் வழங்க தமிழக அரசின் மானிய கமிட்டி மற்றும் விருது வழங்கும் குழு அமைக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்ளும் தீர்மானம்; ' 5 நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கின்றனர் அந்த நடிகர்குளுக்கு எதிராக தீர்மானம்; ' திரைப்பட விமர்சனம் திரை அரங்கில் உள்ளே சென்று செய்ய வேண்டாம்' உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எந்த ஐந்து நடிகர்களுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என கேள்வி எழுப்பியபோது - " முதல் கட்டமாக அந்த ஐந்து நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த பட்டியல் நடிகர் சங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் அனுப்பப்படும் எனவும், மீண்டும் அந்த நடிகர்கள் பழைய நிலையையே தொடர்ந்தால் அவர்களின் பெயர்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைப்பு இல்லாத நடிகர்களுடன் படம் எடுப்பதையும் தயாரிப்பாளர் சங்கம் தவிர்த்து விடும் எண்ணென்று குறிப்பிட்ட அவர், அதைவிட மேலும் தமிழகத்தில் எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகர்களுடன் படம் எடுக்கக் கூடாது எனும் தீர்மானமும் சங்கத்தில் நிறைவேற்றப்படும் எனக் கூறினார்.
மேலும், புதிய திரைப்படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு இருக்கும் கால அவகாசத்தை 28 நாட்களில் இருந்து அதிக படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி உள்ளதாகவும், சிறிய படங்களுக்கும் முறையாக திரையரங்குகள் கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையை திரையரங்க சங்கத்தினருடன் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மற்றும். பெரிய நடிகர்களாக இருந்தாலும் முறையாக அவர்கள் படத்தின் பிரமோஷனுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளது குறித்து முன்னாள் நிர்வாகத்தினர் மீது புகார் வந்துள்ளது எனவும், அது தொடர்பான சட்ட நடவடிக்கை தொடர்வோம் எனவும் கூறினார்.