கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும்...கடந்த 2022ம் ஆண்டில் குறைவு...அமைச்சர் சொன்னது என்ன?

கடந்த 2019ம் ஆண்டை காட்டிலும்...கடந்த 2022ம் ஆண்டில் குறைவு...அமைச்சர் சொன்னது என்ன?
Published on
Updated on
1 min read

இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48 திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம்  பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களை கவரும் திட்டம் :

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுகாதார உயர் அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர், மக்கள் நல்வாழ்வு தொடர்பாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மக்களை கவரும் வண்ணம் உள்ள மக்களைத்தேடி திட்டம் மற்றும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48  திட்டம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

2019 -- 2022 யை ஒப்பிட்டு பேசிய அமைச்சர் :

தொடர்ந்து பேசிய அவர், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 23 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் 1.38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று இருப்பதாக தெரிவித்தவர், கடந்த 2019 ஆம் ஆண்டு 57, 877 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 58,679 பேர் என்ற புள்ளி விவரங்களை தெரிவித்த அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகள் 1 புள்ளி 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com