தமிழ்நாட்டில் குறைவான அளவிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவு

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் குறைவான அளவிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகிறது.
தமிழ்நாட்டில் குறைவான அளவிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவு
Published on
Updated on
2 min read

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் 80 சதவீதமானவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு  தெரிந்தவர்களாகவே உள்ளனர்.பெண்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து வகை வன்முறைகளுக்கு எதிராகவும், சக பெண்கள் ஆரம்ப கட்டத்திலேயே குரல் கொடுத்தால் குற்ற சம்பவம் பாதியாக குறையும். 

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

"பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சட்டங்களும்" என்கிற தலைப்பில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையம் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநில மகளிர் ஆணைய தலைவி குமரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான  குற்ற சம்பவங்களை சட்ட ரீதியாகவும், மன ரீதியாகவும் தடுப்பது தொடர்பாக  நடைபெறும் இந்த ஒரு நாள் கருத்தரங்கில் நூற்றுகணக்கான மாணவிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, "பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னையும், மாநிலமாக தமிழ்நாடும் திகழ்வது பெருமைக்குரிய விஷயம்.மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் குறைவான அளவிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் பதிவாகிறது", என்றார்.

பின்னர் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள் எத்தனை பேரிடம் காவல் உதவி செயலி செல்போனில் உள்ளது என கேள்வி எழுப்பினார். 

அதற்கு ஒரு சிலரே கையை உயர்த்த, காவல் உதவி செயலியை 10ல் ஒரு பெண்களே பயன்படுத்துகின்றனர். பெண் பாதுகாப்பிற்க்காக அதி நவீன வசதிகளுடன் செயல்படும் செயலி அனைவரும் பயன் படுத்த வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 80% பேர் அந்த பெண்ணுக்கு நேரடியாக தெரிந்த நபராக தான் உள்ளனர். உறவினர், நண்பர், அக்கம் பக்கத்தினர் என பட்டியல் நீள்கிறது. 

பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு முன்பாகவே குற்றம் நடக்கும் பொழுதே அதற்கு எதிராக சக பெண்கள் குரல் எழுப்ப வேண்டும்.பெண்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆரம்ப கட்டத்திலேயே பொறுத்து கொள்ள முடியாது என திடமாக சக பெண்கள் கூற வேண்டும். அவ்வாறு எதிர் குரல் வரும்போதே பாதி குற்றங்கள் குறைந்து விடும்.

மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை  பெண்கள் புகார் அளிக்க எளிய முறையில் உதவி எண் 181 செயல்பாட்டில் உள்ளது. அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

பெண்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஆரம்ப கட்டத்திலேயே பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக பெண்கள் பாதுகாப்பிற்கு என்று உருவாக்கப்பட்ட காவல்துறை பிரிவு,  மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளிடம் புகார் அளிக்க முன்வர வேண்டும்.

விழிப்புணர்வு இருந்தாலே குற்றம் நடைபெறுவது பாதியாக குறையும்", என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com