100வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டமும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசாங்கமும்...!!

100வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டமும் கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசாங்கமும்...!!
Published on
Updated on
1 min read

விவசாயி ஒருவரின் உயிர் பலி ஆன நிலையிலும் திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நூறாவது நாளாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி திருஆருவரால் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை வழங்கவில்லை எனவும் மேலும் கரும்பு விவசாயிகள் பெயரில் 11 வங்கிகளில் போலியாக 300 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில் அந்த நிர்வாகம் ஆலையை கால்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது எனவும் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

இதனைத் தொடர்ந்து நிலுவைத் தொகையை வழங்க கோரியும் விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவிக்க கோரியும் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி முதல் கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நூறாவது நாளாக சட்டமன்ற உறுப்பினர்கள்  நாகை மாலிக் கந்தர்வகோட்டை சின்னத்துரை ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து திருமணங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

100 நாட்களாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் தமிழக அரசோ தமிழக முதலமைச்சரோ விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய விவசாயிகள் தமிழக அரசு இதுபோல் மெத்தனமாக இருந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com