மாநிலக் கல்விக் கொள்கை குழுவுக்கு கால நீட்டிப்பு...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மாநிலக் கல்விக் கொள்கை குழுவுக்கு கால நீட்டிப்பு...பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலக் கல்விக் கொளகையை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் புதியதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் அரசு அதிகாரிகள் தலையீடு இல்லை என்றும், குழு சுதந்திரமாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ”மதுவால் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டும் திமுகவின் முக்கிய புள்ளிகள்” - அண்ணாமலை குற்றச்சாட்டு!

உயர்மட்டக் குழுவில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஃப்ரீடா ஞானராணியும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் பழனியும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழுவுக்கு மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.