வெடிக்காத நிலையில் கண்டறியப்பட்ட வெடிக்கும் வெடிகுண்டு!!!

வெடிக்காத நிலையில் கண்டறியப்பட்ட வெடிக்கும் வெடிகுண்டு!!!
Published on
Updated on
1 min read

மணிப்பூரின் கிழக்கு பகுதியான மியான்மரின் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, ​​இரண்டாம் உலகப் போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், அந்த பகுதியின் மக்கள் முழுவதும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அகழ்வாராய்ச்சியும் வெடிகுண்டும்:

மியான்மர் எல்லையில் உள்ள கம்ஜோங் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும் பணியின் போது  வெடிகுண்டு கிடைத்துள்ளாதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன், வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக, அப்பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவைச் சேர்ந்த குழு 114 கிலோ வெடிகுண்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியுள்ளது. 

அப்புறப்படுத்தப்பட்ட வெடிகுண்டு:

வெடிகுண்டை அப்புறப்படுத்துவதற்கு முன், மணிப்பூர் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படைகளின் கூட்டுக் குழு, குண்ட கிடைத்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் 250 குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் பல்வேறு விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.  

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வடகிழக்கு இந்தியா பல கடுமையான போர்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வெடிகுண்டுகள்  ஏற்கனவே இப்பகுதியில் அதிக அளவில் கிடைத்துள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com