ரூபாய் 404 கோடி மதிப்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 15 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மாநகர ஆணையரும், ஏனைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஊரகப் பகுதிகளில் உள்ள 28 ஆயிரம் பள்ளிகளுக்கு பொறுப்பு அலுவலராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 2 நாட்கள் சிறு தானியங்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிக்க: லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர் கைது!