சென்னை தலைமை காவலர் செய்த சிறப்பான செயல்...! இத்தனை பதக்கங்களா...?

சென்னை தலைமை காவலர் செய்த சிறப்பான செயல்...! இத்தனை பதக்கங்களா...?
Published on
Updated on
1 min read

சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் லீலா ஸ்ரீ.  தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் கரங்கள் மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே விளையாட்டு துறையில் அதிகப்படியான பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை பெற்றுள்ளார். குறிப்பாக காவல்துறையில் வைக்கப்படும் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் என அனைத்திலும் பங்கு பெற்று பெருவாரியான சான்றிதழ்களை குவித்து வருகிறார்.

இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தேசிய அளவில் இரண்டாவது தேசிய படைவீரர் விளையாட்டு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் இதைத் தவிர இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொண்டார்கள். மேலும், 700 க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றார்கள் வயது ரீதியாக ஓட்ட பந்தயங்கள் ஆன ஹடுல், ரிலே மற்றும் ஷாட் பூட் உள்ளிட்ட அனைத்து பந்தயங்களும் தேசிய அளவில் நடைபெற்றது. 

குறிப்பாக காவல்துறையில் தமிழகத்தில் இருந்து மூன்று நபர்களும் சென்னையில் இருந்து தலைமை காவலர் லீலா ஸ்ரீ மட்டும் பங்கு பெற்று 5 பதக்கங்கள் வென்று இருக்கிறார். அதில் 400 மீட்டர் ரிலே பந்தயத்தில் தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஹடுலில் வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், ஹம்மர் த்ரோவில் வெண்கல பதக்கமும் மற்றும் 100 மீட்டர் ரிலேவில் வெள்ளி பதக்கம் என ஐந்து பதக்கங்களை சென்னை காவல்துறை சார்பாக லீலா ஸ்ரீ பெற்றுள்ளார். 

குறிப்பாக காவல்துறை சார்பாக இன்னும் கூடுதல் நேரம் கிடைத்தால் இன்னும் அதிகப்படியான பதக்கங்களை பெற்று தருவார் என அவருடைய குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com