சனாதன தர்மம் பாரத நாட்டை ஒற்றுமையாக வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் பினாவில் 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர், இந்தியா கூட்டணியானது இந்து மதத்திற்கு எதிரானது என்று கூறினார். சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
சனாதன தர்மம் பாரத நாட்டுடன் ஆயிரம் ஆண்டுகள் பிணைந்துள்ளதாக குறிப்பிட்ட மோடி, இந்தியா கூட்டணியின் நோக்கம் சனாதனத்தை அழிப்பது தான் என்றும் குற்றம்சாட்டினார்.
சனாதனத்திற்கு எதிரான இந்த தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு சனாதனியும் கிளர்ந்தெழ வேண்டும் என்று ஆவேசமுடன் கூறினார்.