நிதி கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை..... பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரஜன்!!!

நிதி கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை..... பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரஜன்!!!
Published on
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் விதி 110ன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரஜன் தெரிவித்தார்.
 
விதி 110:

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை அளித்த அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விதி 110ன் கீழ் மட்டுமே 3 லட்சத்து 27 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பிட்டில் 1704 அறிவிப்புகளை வெளியிட்டார்கள் எனவும் ஆனால் அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  மேலும், 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 27 சதவீத திட்டங்கள் மட்டும் தான் அதிமுக ஆட்சியில்  செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

86 சதவீதம்:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரை அறிவிப்புகள் 78, முதலமைச்சர் 161 அறிவிப்புகளை தனியாகவும், இதர அறிவிப்புகளாக 46 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டதோடு, விதி 110ன் கீழ் 67 அறிவிப்புகளையும், மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு சென்ற போது 88 அறிவிப்புகளும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கையில் 338 அறிவிப்புகளையும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 330 அறிவிப்புகள் என்று மொத்தம் 3 ஆயிரத்து 537 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 3038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதாவது 86 சதவீத திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

அறிவிக்கப்படாத:

இதில் விதி 110ன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு 39 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளாதவும், 24 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.  இவ்வாறு அறிவித்த அறிப்புகளை செயல்படுத்துவதிலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com