ஈரோடு இடைத்தேர்தல் எப்போது....வேட்பாளர்கள் யார்?!!

ஈரோடு இடைத்தேர்தல் எப்போது....வேட்பாளர்கள் யார்?!!
Published on
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என  தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

தேர்தல் எப்போது:

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். 

வேட்புமனு தாக்கல்:

ஜனவரி 31-ஆம் தேதி இதற்கான  வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும், பிப்ரவரி 8-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பிப்ரவரி 10-ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை:

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு  முடிவு அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

வேட்பாளர்கள் யார்?:

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக  கூட்டணியில் சீட் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கெள்வி எழுந்துள்ளது.  அதேபோல் அதிமுக கூட்டணியிலும் இந்த சிக்கல் நீடிக்கிறது.  இரு கட்சிகளும் இந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு  ஒதுக்கியது என்பது  குறிப்பிடதக்கது.
 
விதிமுறைகள்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com