மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து கடிதம் எழுதிய சிவதாஸ் மீனா...!

மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து கடிதம் எழுதிய சிவதாஸ் மீனா...!

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அண்மையில் அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிக்க : விறுவிறுப்பான இறுதிக்கட்டம்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கோகோ காப்...!

மேலும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாசுபாடான நீரை அருந்தியதால் குடிமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வருவது வருத்தமளிப்பதாகவும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.