தெருவிளக்கு, குடிநீர் இணைப்புகான மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

தெருவிளக்கு, குடிநீர் இணைப்புகான மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

தெருவிளக்கு மற்றும் குடிநீர் இணைப்பிற்கான மின் இணைப்புகள் அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அதிகமாக கொடுக்கப்பட்டிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கம்பத்துடன் கூடிய தெருவிளக்கு அமைப்பது குறித்தும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுவது குறித்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி மற்றும் சதாசிவம் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : திருச்சி மெட்ரோ: சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்!

அதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2016 - 21ஆம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில்,  2021-23ம் ஆண்டு பிப்ரவரி வரை 48 ஆயிரத்து 779 மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தெருவிளக்கு அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஊரக உள்ளாட்சி மூலம் நிதி ஒதுக்கப்படும் நிலையில் மின் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மேட்டூர் தொகுதியில் குறைபாடுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.