
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அந்நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையும் படிக்க : 9 வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்...!
மின்வாரிய ஊழியர்களின் அறிவிப்பையடுத்து, போராட்டத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும், எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் போராட்டத்தையொட்டி, நாளைய தினம் பணிக்கு வராதோர் விவரங்களை தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.