போர் எதிரொலி - ரூ.46,000-த்தை கடந்தது தங்கம் விலை...!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது தங்க நகை சவரன் 46 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம், 46 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 770 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : சி.பி.ஐ. (எம்). கட்சி அலுவலகம் மீது பாட்டில்கள் வீசியதால் பரபரப்பு...!

அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி, 77ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.