வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பீதியில் மக்கள்...!!

வட இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... பீதியில் மக்கள்...!!
Published on
Updated on
1 min read

வட மாநிலங்களில் பல பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் நேற்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். 

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றிய பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.  குறிப்பாக வடமாநிலங்களில் இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.  அதன்படி டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கட்டிடங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். 

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது.  இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.  இதுதவிர பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இதனால் அங்குள்ள மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com