விரைவில் வீடு திரும்புகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

விரைவில் வீடு திரும்புகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

Published on

நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

மூச்சு திணறல் பிரச்சினை இருந்து வந்ததால் அவ்வப்பொழுது செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு வந்தது.  இந்நிலையில் அவர் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு தினங்களில் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சையில் இருந்து வருகிறார்.  நெஞ்சு வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் இன்று ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com