ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
தேர்தல் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பாக பூத் வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியே ஆலோசனை நடத்தினார் ஈரோடு கிழக்கில் உள்ள வில்லரசம்பட்டியில் தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்த எடப்பாடி கே பழனிச்சாமி பூத் வாரியாக உள்ள நிலவரங்கள் குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே கேட்டு அறிந்தார்
திமுக தொகுதி முழுவதிலும் பணபட்டுவாடா
திமுக தொகுதி முழுவதும் பண பட்டுவாடா செய்து வருவதாகவும் வாக்காளர்களை அடைத்து வைத்து வாக்கு சேகரிப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில் அதனை எதிர்கொண்டு தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக பூத் வாரியாக அமைக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து அதிமுகவின் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்