மணல் குவாரிகள் முறைகேடு, ED சோதனை நிறைவு... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்!!

Published on
Updated on
1 min read

மணல் குவாரிகள் முறைகேடு புகாா் தொடா்பாக தமிழ்நாட்டில் அமலாக்கத் துறையினர்  2 நாட்களாக நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் நீா்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமாா் 12 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான குவாரிகளின் ஒப்பந்தப்பணியை புதுக்கோட்டையைச் சோ்ந்த ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோா் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, குவாரிகளிலிருந்து முறைகேடாக  மணல் விற்பனை செய்யப்படுவதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு சொந்தமான வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட  30 இடங்களில் அமலாக்கத்துறையினா் கடந்த 12-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இது தொடா்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராமச்சந்திரன், அண்ணாநகரிலுள்ள ஆடிட்டா் சண்முகராஜ் வீடு, அலுவலகம் மற்றும் பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல  அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

2 நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை 31 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஏராளமான பணபரிவா்த்தனை, சொத்து தொடா்பான டிஜிட்டல் மற்றும் காகித ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com