செயலிழந்த அரசாங்க இயந்திரம்...!!!  குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர்..!!

செயலிழந்த அரசாங்க இயந்திரம்...!!!  குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர்..!!
Published on
Updated on
1 min read

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. மகாராஷ்டிராவில் வர வேண்டிய முதலீடு மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. 

தலைவலியை ஏற்படுத்திய நஷ்டம்:

டாடா-ஏர்பஸ் திட்டத்தின் நஷ்டம் மகாராஷ்டிர அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. இதற்காக ஷிண்டே அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன.  சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் தலைவர் ஆதித்யா தாக்கரே, இந்த முக்கியமான திட்டத்தை மகாராஷ்டிரா அரசு கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

”முதலமைச்சர் ஷிண்டேவின் துரோகம் மற்றும் அலட்சியத்தால் மாநிலம் பின்தங்கத் தொடங்கியுள்ளது.  மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சி காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து எங்களது இயந்திர அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.” என ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் முதலீடு:

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு  அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது” என்று தாக்கரே கூறியுள்ளார்.  மேலும் ”மகாராஷ்டிராவில் வர வேண்டிய முதலீடு மற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, ​​சுபாஷ் தேசாய் தனது ஆட்சிக் காலத்தில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை மகாராஷ்டிராவுக்கு கொண்டு வந்தார்.” என்றும் தெரிவித்துள்ளார் ஆதித்ய தாக்கரே. 

துணை முதலமைச்சராக இருந்திருந்தால்:

தொடர்ந்து பேசிய ஆதித்ய தாக்கரே மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை குறிவைத்து தாக்கி பேசினார்.   அதாவது, “தவறான முடிவுகளால் தேவேந்திர ஃபட்னாவிஸின் இமேஜ் ஆபத்தில் உள்ளது.  தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் ராஜினாமா செய்ய வேண்டும். தற்போதைய அரசாங்கத்தில் நான் துணை முதலமைச்சராக இருந்திருந்தால் இந்நேரம் என்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com