காவிரி விவகாரம்: "24000 டி.எம்.சி கேட்டால், 5000 தருகிறார்கள்" அமைச்சர் துரைமுருகன்!!

காவிரி விவகாரம்: "24000 டி.எம்.சி கேட்டால், 5000 தருகிறார்கள்" அமைச்சர் துரைமுருகன்!!
Published on
Updated on
1 min read

வெள்ளிக்கிழமை அன்று, மீண்டும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும்பொழுது, நமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்து முடிந்தது.

இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தொடர்பாக பேசியதாவது, "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூறியதை தான் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "வேறு வழி இல்லை. ஆதலால் மீண்டும் வெள்ளிக்கிழமை அன்று வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அதில் நிலைப்பாட்டை தெரிவிப்போம். அவர்களுடைய தண்ணீர் தேவையை அவர்கள் கூறுகிறார்கள். எங்களுடைய தண்ணீர் தேவையை  நாங்கள் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் "குறைந்தது 24 ஆயிரம் டிஎம்சியாவது கொடுக்க வேண்டும் என கேட்கிறோம் ஆனால்  5 ஆயிரம் டிஏம்சி தான் கொடுக்க முடியும் என சொல்லியுள்ளார்கள். 5000 டிஎம்சி தண்ணீர் 15 நாட்களுக்கு வரும் என கூறி இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com