குற்றச்செயலை குறைக்க ட்ரோன் கேமரா பறக்கவிட்டு சோதனை

குற்றச்செயலை குறைக்க ட்ரோன் கேமரா பறக்கவிட்டு சோதனை
Published on
Updated on
1 min read

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டு மாநகர காவல் துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது 


பொங்கல் விழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற செயல்கள் நடப்பதை தடுக்க நெல்லையில் பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ட்ரோன்  கேமராவை பறக்கவிட்டு அதிரடி சோதனைகள் நடத்த நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்

அதன் பேரில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ட்ரோன் கேமரா பறக்கவிட்டு சோதனை நடத்தப்பட்டது.  மேலும் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியிலும் இதே போன்று ட்ரோன் கேமரா பறக்கவிட்டு சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் யாரேனும் ஈடுபடுகிறார்களா    அல்லது சட்டவிரோத கும்பல் நடமாட்டம் உள்ளதா என சோதனைகள் நடத்தப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com