அணைக்கட்டு அருகே இறப்பில் மர்மம் இருப்பதாக அண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்துள்ளனர் காவல்துறையினர்.
அணைக்கட்டு அடுத்த மழைச்சந்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் வயது 35. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயபிரியா என்பவருடன் திருமணம் ஆகி 2 நாட்களில் மனைவியை பிரிந்து அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்தவர் ஓசூர் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புளியந்தோப்பில் விஷம் குடித்துள்ளார் என எதிர் வீட்டில் வசிக்கும் சத்யா என்பதற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சத்யா அவரின் நண்பரான கோபி என்பவருக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை அறிந்த கோபி உடனடியாக நடராஜனின் அண்ணன் சேட்டு என்பவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று மயக்க நிலையில் இருந்த நடராஜை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மூன்று நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் நடராஜன். நவம்பர் மாதம் 2ம் தேதி வீடு திரும்பிய அவர் மூன்று நாள் வீட்டில் இருந்து உடல்நிலையில் சரியில்லாத காரணத்தினால் மீண்டும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார்.
இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து உடனடியாக சின்ன கெங்கநெல்லூர் சுடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்திருக்கின்றனர். இதன்பின் அவரின் அண்ணன் சேட்டு என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது தம்பி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அரியூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன்பின் வேலூர் மருத்துவமனை மருத்துவர்கள் அணைக்கட்டு தாசில்தார் மற்றும் போலீசார் ஆகியோர் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
நடராஜனின் உடல்கூறு செய்யப்படு மாதிரிகளை வேலூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்க்கு அனுப்பப்பட்டு முடிவுகள் வந்த பின்னரே முடிவுகள் தெரியும் என காவல்துறாஇ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்படும் பிளாஸ்டிக் அரிசி...!!