"கொலை வழக்கில் உள்ளவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

"கொலை வழக்கில் உள்ளவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?" -  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கொலை வழக்கில் உள்ளவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரையில் ஜாமீனில் வெளியில் வந்தவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில் மதுரை மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நடைபெற்றது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கொலையும் செய்துவிட்டு போலீஸ் பாதுகாப்பும் கேட்பார்களா? என்று கேள்வி எழுப்பியதுடன், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க  | அதிகாரிகள், காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு..! விடுமுறை அளிக்க உத்தரவு..!