தேவையா கோபி இதெல்லாம்....? ' லைக்ஸ் ' -க்கு ஆசைப்பட்டு,ரூ.3,500 அபராதம் வாங்கிய இளைஞர்...!

தேவையா கோபி இதெல்லாம்....?  ' லைக்ஸ் ' -க்கு ஆசைப்பட்டு,ரூ.3,500 அபராதம் வாங்கிய இளைஞர்...!
Published on
Updated on
1 min read

ஈரோட்டில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்குவதற்காக சிக்னலில் குளித்த இளைஞரின் மேல் 3 வழக்குகள் பதிவு செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.  

ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் வாட்டி வருவதால், பொதுமக்கள் இளநீர், தர்பூசணி போன்ற பழச்சாறுகளை பருகி தங்கள் உடல் உஷ்ணத்தை தணித்து வருகின்றனர். 

இதனிடையே,  ஈரோட்டை சேர்ந்த பாருக் என்பவர் ஈரோடு மாவட்டத்தின் பிரதான சந்திப்பான பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் காத்திருந்த போது, தான் கொண்டு வந்திருந்த ஒரு பக்கெட் தண்ணீரில் திடீரென்று குளிக்க ஆரம்பித்தார். 

பாருக்கின் இந்த செயலை பார்த்து சிக்னலில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் அந்த காட்சியை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இந்த சம்பவத்தால் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில், சிறுது நேரம் பரப்பரபான சூழ்நிலை நிலவியது.

இதனை தொடர்ந்து, பன்னீர்செல்வம் பூங்கா சிக்னலில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக, மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனத்தில் பக்கெட்டில் இருந்த தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டு இன்ஸ்டாகிராமில் விளம்பரத்திற்காக செல்போனில் பதிவுகளை எடுத்து பதிவிட்டு இடையூறு செய்தும், இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக செயல்பட்டவரை, ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து , மூன்று வழக்குகள் பதிவு செய்து அபராதம் ரூ 3500/- விதிக்கப்பட்டது.

இளைஞர்கள் இவரைப் போன்று தவறாக சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட வேண்டாம் என்று ஈரோடு மாவட்ட காவல்துறையினர் வேண்டுக்கோள் விடுத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com