ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் - உண்ணாவிரத போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் - உண்ணாவிரத போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது
Published on
Updated on
1 min read

ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி கடற்கரை காந்திசிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

பிரதமர் மோடியை அவதூராக பேசப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது இதனைத்தொடர்ந்து அவரது வயநாடு எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்து பாராளுமன்ற செயலர் உத்தரவை வெளியிட்டார். இந்த தகவல் நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் அனந்தராமன் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென புதுச்சேரி கடறகரை காந்தி சிலை முன்பு நள்ளிரவில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட அமர்ந்தனர். தகவலறிந்து தொண்டர்கள் வரத்தொடங்கியதால் உஷாரான போலீசார் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட அனந்தராமன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து கடற்கரைச்சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து கடற்கரைசாலையை மூடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com