நாங்குனேரி சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் ..!

நாங்குனேரி சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்   ட்வீட் ..!
Published on
Updated on
1 min read

 நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகியோர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனர்.

 அதில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த சின்ன துரைக்கும் நாங்குநேரியை சேர்ந்த அதே பள்ளியில் படித்த சில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

  இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை சந்திரா செல்விக்கும் கையில் விட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 

அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:- 

” கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்”, .

என ட்வீட் செய்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com