தமிழ்நாட்டில் மே மாதம் இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலம் பணப்பரிமாற்றம் என கூட்டுறவுத்துறை அறிவித்திருக்கிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் QR Code மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு, கோவை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm, UPI வசதி செய்து கொடுக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.