பயந்து பதவி விலகினாரா பீகாரின் விஜய் குமார்....!!!!

பயந்து பதவி விலகினாரா பீகாரின் விஜய் குமார்....!!!!
Published on
Updated on
1 min read

மகாகத்பந்தன் கூட்டணியின் தலைவரான லலித் யாதவ் கடந்த வாரம் பீகார் சட்டசபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் சபாநாயகர்  விஜய் குமார் சின்கா அவருடைய பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலை உருவாகியது.  நம்பிக்கையில்லா தீர்மானம் சவாலை ஏற்று கொண்டால் சபாநாயகர் அவர் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

தற்போது பாஜகவிற்கு ஆதரவாக 77 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.  பெரும்பான்மையை நிரூபிக்க இந்த வாக்குகள் போதுமானது இல்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் குமார் சின்கா தோல்வியடைந்தால் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த எம்.எல்.ஏவான ஆவாத் பிகாரி சவுத்ரி சபாநாயகராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் குமார் சபாநாயகர் பதவியிலிருந்து விலக முடியாது எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் பதவி விலக மாட்டேன் என கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று நிதிஷ் குமார் அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களை நிரூபிக்க வேண்டிய சூழலில் சபாநாயகர் விஜய் குமார் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிக்க: ”ஒரு அடி நீள ஜடை உள்ளவர்கள் அறிவாளியாக முடியாது”- பாஜகவிற்கு பீகார் துணை முதலமைச்சர் பதிலடி

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com