சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரும்பு அரிவாள்கள் செய்யும் பட்டறையில் 18.5 அடி உயரம் 2 அடி அகலத்தில் ஆன அரிவாள்கள் செய்யபட்டுள்ளது.
கடந்த 15 நாட்கள் முன்பு ஜெயம்கொண்டநிலையைச் சேர்ந்த பக்தர்கள், இணைந்து மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக சிங்கம்புணரி சேகர் அரிவாள் பட்டரையில் 18.5 அடி உயரம், சுமார் அரை டன் எடை கொண்ட இரண்டு அரிவாள் தயார் செய்ய கேட்டுள்ளனர்.
இந்த பணியை தொழிலாளர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன், 15 நாட்களாக, தொடர்ந்து, ஓய்வில்லாமல் செய்துள்ளனர். இந்தப் பணியை இன்று வெற்றிகரமாக நிறைவெற்றியுள்ளனர்.
அரிவாள் செய்யும் பனி முடிவடைந்ததாள், அடுத்த கட்ட நடவடிக்கையாக, புதிதாக தயார் செய்யப்பட்டுள்ள அரிவாளுக்கு, இன்று சிறப்பு பூஜை செய்து அதனை வேனில் ஏற்றி மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், நேர்த்திகடனை நிறைவு செய்யும் விதமாக, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.