பணமதிப்பு நீக்கம்...மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!!!

பணமதிப்பு நீக்கம்...மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்றம்!!!

மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போது வழக்கு தொடரப்பட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பணமதிப்பு நீக்கம்:

500, 1000 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் என்பது 500, 1000 மதிப்புடைய பணத் தாள்களை செல்லாததாக்கும் இந்திய மத்திய அரசின் முடிவாகும். இந்த முடிவின்படி, நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 தாள்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது.  பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 மதிப்புள்ள பணத் தாள்களில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியிருந்தது.

பிரதமர் மோடி:

8 நவம்பர் 2016 அன்று, இரவு 8.15 மணி அளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.  முன்னறிவிப்பில்லாமல் தொலைக்காட்சி நேரலை மூலமாக நாட்டு மக்களுக்கு இந்த விவரங்களை வெளியிட்டார்.  அன்றைய நாளின் நள்ளிரவிலிருந்து, 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது எனவும், மக்கள் அனைவரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டார்.  இது கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் அரசின் ஒரு நடவடிக்கையென அவர் மேலும் தெரிவித்தார்.

எதிரான மனுக்கள்:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.  தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விசாரணையில் நேற்றும் இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அப்போது, ​​மத்திய அரசிடமும், இந்திய ரிசர்வ் வங்கியிடமும் நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது.  

உச்சநீதிமன்ற கேள்விகள்:

நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொருளாதாரக் கொள்கை விவகாரங்களில் நீதித்துறை கேள்வியெழுப்பாமல் இருப்பது என்பது நீதிமன்றம் அமைதியாக இருக்கிறது என்பது அர்த்தமல்ல.  மறுஆய்வு செய்வதற்கான வரையறுக்கப்பட்ட கொள்கைகளில் அரசு எடுக்கும் முடிவுகளை எந்த நேரத்திலும் பரிசீலிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்று அமர்வு கூறியது.

ரிசர்வ் வங்கி தரப்பு வாதம்:

ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக பேசியபோது பணமதிப்பு நீக்க முடிவை எடுத்ததில் எந்தத் தொய்வும் இல்லை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஜி-20 அனைத்துக் கட்சி மாநாட்டில் கட்சி தலைவர்களுடனான மோடியின் சுவாரஸ்யமான தருணங்கள் புகைப்படங்களாக...