இந்தியா போன்ற சிறந்த ஜனநாயக நாட்டில் ஜி-20 மாநாட்டின் வழி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் முன்னேற்ற முயற்சிப்போம்.
ஜி-20 அமைப்பு:
இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளும் கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு செயல்படுகிறது.
தலைமை பொறுப்பு:
கடந்த நவம்பர் 16ம் தேதி, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இந்தியா இப்பொறுப்பை டிசம்பர் 01 அன்று ஏற்றுக்கொண்டது.
எதிர்பார்த்து:
உலகின் சிறந்த ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆஸ்திரேலியாவின் வர்த்தக இணை அமைச்சரும் செனட்டருமான டிம் அயர்ஸ் தெரிவித்துள்ளார். குவாட் தலைவர்களுக்கு விருந்தளிப்பதற்கும், செப்டம்பரில் ஜி-20 கூட்டங்களை நடத்துவதற்கும் இந்தியாவின் தலைமைப் பங்கை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் எனவும் டிம் அயர்ஸ் கூறியுள்ளார்.
உறவை வலுப்படுத்த:
ஜி-20 மாநாடு வழியாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முயற்சிப்போம் எனவும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில் இந்தியாவுக்கு இந்த மிகப்பெரிய வாய்ப்பு சரியானது எனவும் தெரிவித்துள்ளார் டிம் அயர்ஸ். மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸின் அரசாங்கம் இந்தியாவுடனான உறவில் ஆழ்ந்த மரியாதை வைத்திருப்பதாக டிம் அயர்ஸ் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”மீண்டும் ஒருமுறை உதவினால்....” சீனாவை எச்சரித்த அமெரிக்கா!!!