தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சரிவு...இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சரிவு...இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜுலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, இளைஞர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையும் படிக்க : தேனி மாவட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு... !

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டம், சோழியங்கநல்லூர் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6.51 லட்சம் வாக்காளர்கள் உள்னர். குறைந்த பட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 292 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.