வீட்டை விட்டு விரட்டிய மருமகள்: தர்ணாவில் ஈடுபட்ட மாமியார்...!

வீட்டை விட்டு விரட்டிய மருமகள்: தர்ணாவில்   ஈடுபட்ட மாமியார்...!
Published on
Updated on
1 min read

சேலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை வீட்டை விட்டு துரத்திய மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாமியார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். 

உடல் நலம் பாதிக்கப்பட்ட மாமியாரை வீட்டை விட்டு துரத்தும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் அருகே அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயாவை இளையமகன் குமரேசன் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் குமரேசனின் மனைவி சோனியா மாமியார் என்றும் பாராமல் ஜெயாவை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயா காரிப்பட்டி காவல்நிலையத்தல் புகார் தெரிவித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத்தால் ஜெயா தனது உறவினருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

அப்போது திடீரென மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து களைய செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com