தொண்டர் மீது கல்லெறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்....காரணம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மாலை வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மாலை இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். 
தொண்டர் மீது கல்லெறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்....காரணம் என்ன?
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். ஆய்வு நடைபெற்ற போது தொண்டர் மீது அமைச்சர் மண் கட்டியை எடுத்து எறிவது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது.  

காரணம் என்ன?:

ஆய்வு நடைபெற்ற இடத்தில் அமைச்சர் அமர நாற்காலி எடுத்து வருவதற்கு தாமதமானதால் கடுப்பாகிய அமைச்சர் தொண்டர் மீது மண் கட்டியை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீக்கிரம் எடுத்து வரவில்லை என்று கூறி மண் கட்டியை தூக்கி எறியக்கூடிய காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

உடனடியாக சேரை எடுத்து வர வேண்டும் எனக் கூறி கல்லை தூக்கி எறிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  இதைக் குறித்து கட்சி சார்பிலும் அமைச்சர் சார்பிலும் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com